‛மிகப்பெரிய ஏமாற்றம்': புடின் - மோடி சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அதிருப்தி
‛மிகப்பெரிய ஏமாற்றம்': புடின் - மோடி சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அதிருப்தி
‛மிகப்பெரிய ஏமாற்றம்': புடின் - மோடி சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அதிருப்தி
ADDED : ஜூலை 09, 2024 03:34 PM

கீவ்: பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு, மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோ புறநகரில் , அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். மோடியை கட்டியணைத்து வரவேற்று புடின் அழைத்துச் சென்றார்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட ‛எக்ஸ் ' சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் ரத்தக்கறை படிந்த குற்றவாளியை கட்டிப்பிடிப்பதை பார்ப்பது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடியாகும். இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.