மோடியை அமர வைத்தார்; எலெக்ட்ரிக் காரை ஓட்டிச் சென்றார்: புடின் செய்த புதுமை
மோடியை அமர வைத்தார்; எலெக்ட்ரிக் காரை ஓட்டிச் சென்றார்: புடின் செய்த புதுமை
மோடியை அமர வைத்தார்; எலெக்ட்ரிக் காரை ஓட்டிச் சென்றார்: புடின் செய்த புதுமை
ADDED : ஜூலை 09, 2024 11:00 AM

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, ரஷ்ய அதிபர் புடின் ஓட்டி செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று (ஜூலை 09) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 09) பிரதமர் மோடியை எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் ரவுண்டு அடித்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.