கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி
கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி
கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி
ADDED : ஜூலை 09, 2024 04:19 PM

சென்னை: தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அடித்தட்டு மக்களும் வளர வேண்டும் என போராடிய ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு சமூகநீதி இயக்கத்திற்கான இழப்பு.
கூலிப்படை
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக போராடியவர் ஆம்ஸ்ட்ராங். அவர் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டியலின, வன்னியர் சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என வருத்தப்பட்டவர். சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.
நம்பிக்கை இல்லை
தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களுக்கு பிறகு தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை. கொலைகளை அரங்கேற்றும் கூலிப்படையினருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். சிலர் சமூக நீதியை வைத்து, அரசியல் செய்து ஓட்டுகளை பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.