Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்'

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்'

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்'

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்'

UPDATED : ஜூன் 30, 2024 05:48 PMADDED : ஜூன் 29, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது . 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை பெற்றது.



டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து அசத்தினர். கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் 9 ரன்னில் அவுட் ஆனார் ரோகித் சர்மா. அடுத்து வந்த ரிசப்பந்த்(0) டக் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சூர்யகுமார் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராத் கோஹ்லி(76) நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. இந்நிலையில் தென்னாப்ரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

177 ரன்கள் இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் க்ளாசன் (52)அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். குயின்டன் டிகாக் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்னில் தோல்வியடைந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங், மற்றும் பாண்ட்யா அசத்தல் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.

ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக ‛சாம்பியன் பட்டம் வென்றது.

ரோகித் சர்மா, கோஹ்லி ஒய்வு

இந்திய அணியின் விராட் கோஹ்லி டி-20 தொடர்களிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போட்டி எனது கடைசி போட்டி எனவும் தெரிவித்தார். கோஹ்லியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் டி - 20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜடேஜா ஓய்வு அறிவிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் ஷர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுதும் கொண்டாட்டம்

முன்னதாக இந்தியா சம்பியன் பட்டம் பெற்றதை நாடு முழுதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜனாதிபதி வாழ்த்து

'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இறுதிவரை போராடி போட்டி முழுவதும் சிறந்த திறமையை இந்திய அணி வெளிப்படுத்தி உள்ளது' என ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி உள்ளார்.



இந்திய வீரர்களுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரோகித் சர்மாவின் சிறப்பான தலைமை பண்பையும், விராட் கோஹ்லியின் இன்னிங்ஸ் மற்றும் அவரது பங்களிப்புக்கும், சூர்யகுமாரின் கேட்ச், மற்றும் பும்ராவின் பங்களிப்புக்கும் மோடி பாராட்டி உள்ளார். டிராவிட் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.



முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முழு ஆதிக்கத்துடன் இந்தியா உலகக் கோப்பையை வென்றதை கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களில் இணையற்ற அறிவுக்கூர்மையை இந்திய அணி வெளிப்படுத்தியது. தோல்வியே காணாமல் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிறைவு செய்தது பாராட்டுக்குரியது என முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.



நாட்டிற்கே பெருமை

இந்திய அணி நம் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி ரோகித் சர்மாவின் தலைமைக்கு ஒரு சான்று என காங்., எம்.பி ராகுல் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us