இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ADDED : ஜூலை 11, 2024 01:03 AM

வியன்னா : ரஷ்யா, ஆஸ்திரிய பயணத்தை நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார் மோடி.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், அரசு முறை பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்றார் பிரதமர் மோடி.
ரஷ்யாவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். பேச்சின் வாயிலாகவே அமைதியை ஏற்படுத்த முடியும் என, புடினிடம் அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவே, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெஹம்மர் அவரை சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரிய வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார்.
இரு நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்த பின் இந்தியா புறப்பட்டார்.