உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு
உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு
உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு
ADDED : ஜூலை 10, 2024 11:18 PM

வியன்னா: உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா , யுத்தத்தை அல்ல என ஆஸ்திரியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அரசு முறைப்பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியா சென்று அந்நாட்டு பிரமதர் கார்ல் நெஹம்மரை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து வியன்னாவில் ஆஸ்திரிய வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி பேசியது, இந்தியா -ஆஸ்திரியா இடையே 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடுகிறது. மேலும் ஆஸ்திரியாவிற்கு இந்தியர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். இரு நாடுகளிடையே பல்வேறு ஒற்றுமைகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவில் அன்மையில் உலகின் மிகப்பெரிய அளவில் தேர்தல் நடத்தியுள்ளோம். 60 கோடி இந்தியர்கள் வாக்களித்தனர். 60 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளோம். இந்தியா ஒரு போதும் போரை துவக்காது. உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா யுத்தத்தை அல்ல என்றார்.
முன்னதாக வியன்னா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, வந்தே மாதரம் பாடல் இசை வடிவில் ஒலிக்கப்பட்டது.