மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு
மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு
மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு
UPDATED : ஜூலை 28, 2024 02:46 PM
ADDED : ஜூலை 28, 2024 02:31 PM

டோக்கியோ: 'மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஜப்பான் எடோகாவாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்த. பின்னர் ஜெய்சங்கர் பேசியதாவது: இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி என்பதை வலியுறுத்தியவர் காந்தி. அமைதி மற்றும் அகிம்சை பற்றிய காந்தியின் சிந்தனைகள் பெரியது. இன்று உலக நாடுகள் பல மோதல்களை எதிர்கொண்டு வருகிறது. டோக்கியோவில் இந்திய சமூகத்தினர் வசித்து வரும் பகுதியில் உள்ள பூங்காவிற்கு விரைவில் 'காந்தி பூங்கா' என பெயரிடப்படும்.
தேச தந்தை
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆசியாவின் பிற பகுதிகள் சுதந்திரமடைந்தன. இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று நாம் கூறும்போது, உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. காலப்போக்கில், தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் மக்கள் காந்தியை தேசத்தின் தந்தையாக நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


சந்திப்பு
டோக்கியோவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.