Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஒலிம்பிக்; பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

ஒலிம்பிக்; பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

ஒலிம்பிக்; பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

ஒலிம்பிக்; பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி

UPDATED : ஜூலை 28, 2024 05:36 PMADDED : ஜூலை 28, 2024 01:47 PM


Google News

முழு விபரம்

Latest Tamil News
பாரிஸ்: பாரிசில் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து லீக் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடந்து வருகிறது. 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று (ஜூலை 27) பாரிசின் சென் நதியில் 6 கி.மீ தூரத்திற்கு துவக்க விழா நடந்தது.

2வது நாளாக இன்று (ஜூலை 28) நடந்த பாட்மின்டன் லீக் சுற்று, ஒற்றையர் பிரிவில் மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபாகாவை 9- 21, 6-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

பாட்மின்டன்


பாட்மின்டன் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றார்.

துப்பாக்கி சுடுதல்


துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா, தகுதிச்சுற்றில் 5ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் அசத்தல்

துப்பாக்கி சுடுதல் போட்டி, 10 மீ., ஏர்ரைபில் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

துடுப்பு படகு போட்டி

துடுப்பு படகு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் முன்னேறினார். வரும் ஜூலை 30ம் தேதி மதியம் 1.40 மணியளவில் காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா பிரிட்டன் வீராங்கனை அன்னா ஹர்சேவை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பதக்க பட்டியல்

ஒலிம்பிக் தொடரில் 3 தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 2 தங்கம், 1 வெண்கல பதக்கமும் வென்றுள்ளது. இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us