ஜாமின் மனுக்களை கையாளுவது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி
ஜாமின் மனுக்களை கையாளுவது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி
ஜாமின் மனுக்களை கையாளுவது குறித்து நீதிபதிகளுக்கு விளக்கிய தலைமை நீதிபதி
ADDED : ஜூலை 28, 2024 04:07 PM

பெங்களூரு: 'ஜாமின் மனுக்களின் விசாரணையின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சந்திரசூட் பேசியதாவது: விசாரணை நீதிமன்றங்களில் ஜாமின் பெற வேண்டியவர்கள், அது கிடைக்காமல் போனால், அவர்கள் உயர் நீதிமன்றங்களை நாடுவார்கள். உயர் நீதிமன்றங்களில் ஜாமின் கிடைக்கவில்லை என்றால், இதன் விளைவாக, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இந்த தாமதம் மனுதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை அதிகரிக்கிறது.
ஜாமின் மனுக்களின் விசாரணையின் போது நீதிபதிகள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் அறிய பொது அறிவு தேவை. ஒவ்வொரு வழக்கின் நுணுக்கங்களையும் நீதிபதிகள் நன்கு ஆராய வேண்டும். எங்களுக்கு முன் வைக்கப்படும் மிகச்சிறிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாதது. இவ்வாறு அவர் பேசினார்.