Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி

5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி

5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி

5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி

ADDED : ஜூலை 28, 2024 01:32 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற 633 மாணவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்கள் இறந்துள்ளனர்.

இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் பல்வேறு வகைகளில் கடந்த ஐந்தாண்டுகளில் 633 பேர் உயிரிழந்து உள்ளனர். கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 109 பேரும், பிரிட்டனில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், உக்ரைனில் 18 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், ஜார்ஜியா, கிர்கிஸ்தான், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் தலா 12 பேரும் சீனாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதில் தாக்குதல் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு கடத்தல்


அமெரிக்காவில் இருந்து 3 ஆண்டுகளில் 48 மாணவர்கள் நாடுகடத்தப்பட்டு உள்ளனர். இதற்கான உரிய காரணங்களை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us