ஏ.சி.,புறநகர் ரயில்களுக்கு வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஏ.சி.,புறநகர் ரயில்களுக்கு வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஏ.சி.,புறநகர் ரயில்களுக்கு வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ADDED : ஜூன் 23, 2025 09:01 PM

சென்னை:சென்னையில் ஏ.சி., புறநகர் ரயில்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் குளிர்சாதன வசதியுடைய புறநகர் ரயில் சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை:
ஏப்ரலில் 1,488-ஆக இருந்த தினசரி சராசரி பயணிகள் எண்ணிக்கை, மே மாதத்தில் 2,571 ஆகவும்,
ஜூன் மாதத்தில் 2,800-ஆக உயர்ந்துள்ளது.
அலுவலகம் செல்வோர், தொழிலதிபர்கள், பிரதிநிதிகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோருடன் மற்றும் பலருக்கும் பெரும் பயன்தரக்கூடிய வசதி கிடைத்துள்ளது. தற்போது மொத்தம் 8 ஏ.சி., புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் தேவையின் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கவும் திட்டங்கள் உள்ளன.
இவ்வாறு அறிக்கயைில் குறிப்பிடப்பட்டுள்ளது.