ADDED : ஜூன் 23, 2025 08:36 PM
கோத்தகிரி:
கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், நடப்பாண்டு, பெற்றோர் ஒத்துழைப்புடன், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இப்பள்ளியை, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில், பள்ளி கட்டமைப்பு வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, சமையல் கூடம் மற்றும் பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நுால்கள் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பொறியாளர் அப்பாதுரை உட்பட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.