/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஆய்வு: தடுக்க கோரி மக்கள் கலெக்டரிடம் மனு டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஆய்வு: தடுக்க கோரி மக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஆய்வு: தடுக்க கோரி மக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஆய்வு: தடுக்க கோரி மக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஆய்வு: தடுக்க கோரி மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 23, 2025 08:38 PM

ஊட்டி:
ஊட்டி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதை அறிந்த கிராம மக்கள், எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி அருகே, துானேரி ஊராட்சிக்கு உட்பட்ட 'தொரைஹட்டி, கீழ்தொரை ஹட்டி, ஊர்மலை, எப்பநாடு, மரகல், கரக்கல், நெல்லி மந்து,' உள்ளிட்ட கிராமங்களில், 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஊர்மலையிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் எப்பநாடு கூட்டுறவு தொழிற்சாலை அருகே சின்ன குன்னுார் சாலையில், 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் பார்த்து சென்றுள்ளனர்.
இதை அறிந்த கிராம மக்கள் கடந்த மே மாதம் டாஸ்மாக் மாவட்ட மேலாளரை நேரில் சந்தித்து , மதுக்கடை வரக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தடுக்க கோரி மனு
இந்நிலையில் , தொரைஹட்டி , ஊர் மலை ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம்வந்து கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டார்.
கிராம மக்கள் கூறுகையில்,'எப்பநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அருகே சின்ன குன்னுார் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு நடத்தி சென்றதை அறிந்தோம். எங்கள் பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் பட்சத்தில் பல்வேறு பாதிப்புகள் நேரிடும் என்பதால் உடனடியாக தடுக்க ஆவன செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'என்றனர்.