வயநாடு நிலச்சரிவு: தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுரை
வயநாடு நிலச்சரிவு: தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுரை
வயநாடு நிலச்சரிவு: தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுரை
ADDED : ஆக 02, 2024 03:11 PM

சென்னை: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 326 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தை கையில் எடுத்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டதுடன், இச்சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.