ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?
UPDATED : ஆக 02, 2024 04:44 PM
ADDED : ஆக 02, 2024 01:50 PM

அரியலூர்: ‛‛ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது'' என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டுபிடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடந்த கம்பன் திருவிழா நிறைவு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‛‛ திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான் என்று கூறியதோடு, ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்'', என்று கூறிச் சென்றார். இந்தப் பேச்சு அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில். ரகுபதியின் பேச்சுக்கு மாறாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வாயை திறந்துள்ளார்.
அரியலூரில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியில் சிவசங்கர் பேசியதாவது: ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது. ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பேச்சு தி.மு.க., அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.