55 சி.என்.ஜி., பஸ்கள் இயக்கம் அரசுக்கு ரூ.2 கோடி மிச்சம்
55 சி.என்.ஜி., பஸ்கள் இயக்கம் அரசுக்கு ரூ.2 கோடி மிச்சம்
55 சி.என்.ஜி., பஸ்கள் இயக்கம் அரசுக்கு ரூ.2 கோடி மிச்சம்
ADDED : செப் 14, 2025 06:04 AM

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும், 55 சி.என்.ஜி., எனும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்களால், ஓராண்டில், 2 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. 1,000 பஸ்களும் சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாறும்போது, அதிகளவில் செலவு மிச்சமாகும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்படுத்தி பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக, கடந்த ஜனவரி மாதத்தில் மூன்று பஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டன.
இதனால், போக்குவரத்து கழகங்களின் செலவுகள் குறைந்துள்ளன. இதையடுத்து, சி.என்.ஜி., வகை பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த பஸ்சை இயக்கும்போது, 1 கி.மீ., துாரத்திற்கு, 3.85 ரூபாய் எரிபொருள் செலவு மிச்சமாகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 2 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது; சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதும் குறைந்துள்ளது.
மேலும், 1,000 பஸ்கள் சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கான உபகரணங்கள் வாங்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பஸ்களும் பயன்பாட்டிற்கு வரும்போது, அரசு போக்கு வரத்து கழகங்களின் எரிபொருள் செலவு பெருமளவில் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.