'ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.,'
'ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.,'
'ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.,'
ADDED : ஜன 18, 2024 02:05 AM
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:
கட்சி கொடி ஏற்றியதற்காக, பெரம்பலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் செல்வராஜ், தி.மு.க., அரசின் துாண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார். இது, தமிழகத்தில், தி.மு.க., எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச்செயல்களை தடுக்கவோ, குற்றவாளிகளை கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற தி.மு.க., அரசு, தன் சட்டம் - ஒழுங்கு மற்றும் நிர்வாக தோல்விகளை மறைக்க, பா.ஜ.,வினரை கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றுகிறது.
தி.மு.க.,வின் இந்த எதேச்சதிகார போக்கை மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதை தி.மு.க., உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


