'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'
'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'
'ரவுடிகளுக்கு எதிரான அதிரடியால் பழிக்கு பழி கொலைகள் குறைந்தன'

சென்னை : ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, நான்கு மாதங்களில் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் குறைந்துள்ளதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2024ல், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 501 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 483 கொலைகளாக குறைந்துள்ளன.
அத்துடன், ரவுடிகளுக்கு இடையேயான பழிக்கு பழி வாங்கும் கொலைகளும் குறைந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, 22 கொலைகள் நடந்த நிலையில், இந்த ஆண்டு, 18 தான் நடந்துள்ளன.