ADDED : ஜன 05, 2024 06:22 AM

சிதம்பரம் : தண்டவாளத்தை கடக்க முயன்ற ரேஷன்கடை ஊழியர் ரயில் மோதி இறந்தார்.
சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை விபீஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ், 53; சிதம்பரம் வ.உ.சி. தெருவில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்.
இவர், நேற்று காலை, விற்பனை தொகையை, அண்ணாமலை நகர் சி.கொத்தங்குடி தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்டிவிட்டு, கடைக்கு புறப்பட்டார்.
அப்போது, மேம்பாலம் கீழே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றபோது, புதுச்சத்திரத்தில் இருந்து நாகூர் நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருணா ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.