அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய்: லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய்: லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய்: லோக்சபாவில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடில்லி: கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகளை ரயில்வே பிடித்துள்ளது, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரூ.562 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு லோக்சபாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதிலளித்து கூறியதாவது:
கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரயில்வே கண்டறியப்பட்டனர். மேலும் இந்த பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் (அபராதம்) ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ-அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளை கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் இல்லாத பயணிகள் பதிவாகியுள்ளனர்.
டிக்கெட் இல்லாத பயணம் ரயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளை குறைக்கவும், ரயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.