''முதலில் தபால் ஓட்டுகள்; 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்'': சத்யபிரதா சாகு தகவல்
''முதலில் தபால் ஓட்டுகள்; 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்'': சத்யபிரதா சாகு தகவல்
''முதலில் தபால் ஓட்டுகள்; 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்'': சத்யபிரதா சாகு தகவல்
UPDATED : ஜூன் 03, 2024 05:26 PM
ADDED : ஜூன் 03, 2024 04:48 PM

சென்னை: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் கடைசி சுற்றுக்கு முன், தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும்' என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஜூன் 04) நடைபெற உள்ளது. இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில், சத்யபிரதா சாகு கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் கரும்பலகையில் எழுதிப்போடப்படும். காலை 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.
அரசியல் பிரமுகர்கள்
அனைத்து சுற்று ஓட்டு எண்ணிக்கையும் முடிந்தவுடன், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையையும் சேர்த்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஓட்டு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். ஓட்டு எண்ணும் மையங்களில் எந்த விதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.