பாக்., ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு: முன்னாள் பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளருக்கு ஆயுள் தண்டனை
பாக்., ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு: முன்னாள் பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளருக்கு ஆயுள் தண்டனை
பாக்., ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு: முன்னாள் பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூன் 03, 2024 05:06 PM

நாக்பூர்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் திட்டத்தின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் பொறியாளராக இருந்தவர் நிஷாந்த் அகர்வால். இவர் கடந்த 2018ம் ஆண்டு பிரம்மோஸ் ஏவுகணை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடைபெற்று வந்தது.
விசாரணையில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜென்ட்களால் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படும் நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் ஆகிய இரண்டு பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணை பற்றிய ரகசிய தகவல்களை உளவு பார்த்தது தெரியவந்தது. இதில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிஷாந்த் அகர்வாலுக்கு, நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.