தோல்வியின் விளிம்பில் இண்டியா கூட்டணி: எல்.முருகன் விமர்சனம்
தோல்வியின் விளிம்பில் இண்டியா கூட்டணி: எல்.முருகன் விமர்சனம்
தோல்வியின் விளிம்பில் இண்டியா கூட்டணி: எல்.முருகன் விமர்சனம்
ADDED : ஜூன் 03, 2024 03:45 PM

ஈரோடு: இண்டியா கூட்டணி தோல்வியின் விளிம்பில் உள்ளது என நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் இன்று(ஜூன் 03) மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில்,‛‛இண்டியா கூட்டணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. இண்டியா கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கேள்விக்குறி தான். நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என எல்.முருகன் கூறினார்.