UPDATED : ஜூன் 03, 2024 02:52 PM
ADDED : ஜூன் 03, 2024 02:33 PM

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல் நங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45).
விவசாய கூலி தொழிலாளி. இவரது தம்பி சரத்குமார் கார் டிரைவர். இருவரும் நேற்று (ஜூன் 2) இரவு தனது வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சரத்குமார் தன் கையில் வைத்திருந்த கத்தியில் மார்பில் குத்தியதில் சக்திவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், சரத்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.