/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்
கரூர் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்
ADDED : ஜூன் 04, 2024 03:57 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமை வகித்தார்.
பின், அவர் கூறியதாவது:
கரூர் தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணும் பணி இன்று காலை 8:00 மணிக்கு தளவாபாளையம் எம்.குமாராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் துவங்கும். 358 அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணியில், 804 போலீசார் ஈடுபடவுள்ளனர்.
கரூர் சட்டசபை தொகுதியில், 269 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டு, 20 சுற்றுகளாகவும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 260 ஓட்டுச்சாவடிகளில், 19 சுற்றுகளாகவும், அரவக்குறிச்சி தொகுதியில், 253 ஓட்டுச்சாவடிகளில், 19 சுற்றுகளாகவும், மணப்பாறை தொகுதியில், 324 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 24 சுற்றுகளாகவும், விராலிமலை தொகுதியில், 255 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒட்டுக்குகள், 19 சுற்றுகளாகவும், வேடசந்துார் தொகுதியில், 309 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் என மொத்தம், 7,708 தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இவை தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். மேலும் தபால் வாக்குகள் எண்ணுவதற்கென, 8 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு ஒவ்வொரு மேஜைக்கும் தலா, 500 தபால் ஓட்டுக்கள் வழங்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக எண்ணப்படும்.
அலுவலர்கள் கைப்பேசி, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளதால், அவைகளை எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு கூறினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.