பா.ம.க., முக்கிய நிர்வாகி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க., முக்கிய நிர்வாகி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க., முக்கிய நிர்வாகி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
ADDED : ஜூன் 10, 2025 03:29 PM

சென்னை: பா.ம.க., வக்கீல்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பதவியில் இருந்து பாலுவை நீக்கி உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் பாலு, பா.ம.க.,வின் வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தலைவராக பதவி வகித்து வந்தார். பிரபல வழக்குகள் பலவற்றை நடத்தி வருகிறார். கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவர்.
தற்போது பாலுவிற்கு பதிலாக வக்கீல் வி.எஸ்.கோபு, சமூகநீதி பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை
ராமதாஸ் நீக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே தற்போது பாலு நீக்கப்பட்டுள்ளார்.