Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு

UPDATED : ஜூன் 01, 2025 09:16 PMADDED : ஜூன் 01, 2025 08:51 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 35 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அந்நாட்டு ராணுவம் அடங்கி போவார்கள் என நினைக்க முடியாது. நினைக்கவும் கூடாது,'' என அண்ணாமலை கூறியுள்ளார்.

'சாணக்யா' யுடியூப் சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: தாக்குதல் நடந்த நேரத்தில் 15 சதவீத நேரத்தை போலி செய்திகளை எதிர்கொள்ள செலவு செய்தோம் என ராணுவ தளபதி கூறியுள்ளார். சர்வதேச பொய் செய்திகள் பரவின. அதனை உண்மையான நேரத்தில் பதிலளித்தோம்.

நிறைய இழப்புகள் ஏற்பட்ட போதும் பாகிஸ்தான் கொண்டாடி வருவது ஆச்சர்யம் அளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் செல்லும் இடம் எல்லாம் ராணுவ தளபதியை அழைத்து செல்கிறார். அவரை தள்ளி வைத்தால், புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றி விடுவார் என பயம் உள்ளது.

எதிர்காலத்தில் இரு முனை போரை பார்க்க போகிறோம். ஒரு பக்கம் சீனாவையும், ஒரு பக்கம் பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் சூழ்நிலை வரப் போகிறது. தவறு நம் மீது கிடையாது. தவறு இரண்டு நாடுகள் மீதும் உள்ளது. நாம் எந்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் கிடையாது. ஆனால் இரு நாடுகளும் ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டவை.

சின்ன சின்ன தீவுகளுக்கு கூட சீனா பிரச்னை செய்கிறது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருக்கிறது. எப்போது என தெரியாது. நம் தலைமுறையில் போர் வரலாம். அல்லது அடுத்த தலைமுறையில் போர் வரலாம்.

நமது பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது. இந்த போர் மிகவும் வித்தியாசமான போர். உலகில் 3 அணுசக்தி நாடுகள் உறவினர்களாக கிடையாது. இரண்டு அணுஆயுதம் கொண்ட நாடுகளுக்கு மத்தியில் இந்தியா உள்ளது. இந்தியாவில் பிரதமர் தன்னிச்சையாக செய்ய முடியாது. அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது தான் இந்திய ஜனநாயகம். இதனை எப்போதும் மோடி செய்தது கிடையாது.

முப்படைகளுக்கு எல்லை தெரியும். கட்சிகளுக்கு எல்லை தெரியும். அரசுக்கு எல்லை தெரியும். இந்த 3 எல்லைகளும் பாகிஸ்தானுக்கு பொருந்தாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.பஹல்காம் தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியது பார்த்தால் போன்று அரசியல்வாதி கூட அப்படி பேச மாட்டார். அவர் பேசுவதை பார்த்தால், பாகிஸ்தான் நாடு இருப்பதே இந்தியாவை எதிர்ப்பதற்காக தான் என பேசுவார். இந்தியாவில் முப்படை தளபதிகள் பொறுப்பாக பேசுவார்கள்.

பாகிஸ்தான் என்ற முரட்டு குணம் கொண்ட நாட்டுடன் நாம் சண்டை போடுகிறோம். இது கடைசி சண்டை கிடையாது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் பழிவாங்க நினைக்கின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை இந்தியா எதிர்த்தால் மட்டும் அந்த நாடு அங்கு இருக்க முடியும். அப்போது தான் ராணுவத்துக்கு மரியாதை. பாகிஸ்தான் ராணுவம் சிமென்ட், இரும்பு கம்பெனி நடத்துகின்றனர். பிஸ்கட், வேபர் உற்பத்தி செய்கின்றனர். 35 சதவீத ஜிடிபியை கட்டுப்படுத்துகின்றனர். இதனால், ராணுவம் அடங்கி போவார்கள் என நினைக்க முடியாது. நினைக்கவும் முடியாது.

இந்தியா பொறுப்பான நாடு என உலக நாடுகள் பார்க்கின்றன.. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்த மட்டுமே விமானப்படைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம், ரேடாரை தாக்க கூறவில்லை. 7 ம் தேதி இந்திய ராணுவத்தின் திறமையை உலக நாடுகளுக்கு புரிய வைத்தோம். அன்றைக்கு நடவடிக்கை முடிந்துவிட்டது என தெரிவித்துவிட்டோம்.ஆனால், பாகிஸ்தான் சிவிலியன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அத்துமீறலில் ஈடுபட துவங்கியது.

70 சதவீத வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால், தற்போது, ராணுவத்துக்கு 65 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030ல் இதனை 90 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் பாகிஸ்தான் பிட்காயினை அங்கீகரித்து உள்ளது. இதனை பயங்கரவாதம், போதை மருந்துக்கு பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.பாகிஸ்தானை போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

உலக நாடுகளுக்கு அனைத்து கட்சியை அனுப்பியதால் என்ன பயன் என கேட்கின்றனர். கொலம்பியாவில் நடந்தது ஒரு வெற்றி தான். அடுத்த பாகிஸ்தான் என்ன செய்ய போகிறது என பார்க்க வேண்டும் நாம் வளர்ச்சியை விரும்பும் நாடு. பாகிஸ்தான் போரை விரும்பும் நாடு. நாமாக சண்டையை விரும்புபவர்கள் கிடையாது.பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் விடுமுறையில் திரும்பும்போது சீருடையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனை பார்க்கும் குழந்தைகள் மத்தியில் ஆர்வம் வளரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us