/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சித்தாமூரில் வார சந்தை இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு சித்தாமூரில் வார சந்தை இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு
சித்தாமூரில் வார சந்தை இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு
சித்தாமூரில் வார சந்தை இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு
சித்தாமூரில் வார சந்தை இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் தவிப்பு
ADDED : ஜூன் 01, 2025 08:34 PM
சித்தாமூர்:சித்தாமூரில் வார சந்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சரவம்பாக்கம், பொலம்பாக்கம், காட்டுதேவாத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 20,000க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசிக்கின்றனர்.
சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதியான மதுராந்தகத்தில் திங்கட்கிழமையும், செய்யூரில் வியாழக்கிழமையும், பவுஞ்சூரில் புதன் கிழமையும், கூவத்துாரில் சனிக்கிழமையும் வார சந்தை நடந்து வருகிறது.
சந்தை நடக்கும் பகுதி சுற்று வட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகளை சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.
மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன், நண்டு, இறால், கருவாடு போன்றவற்றை இந்த சந்தைகளில் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், வியாபாரிகள் பலர் கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி வந்து, சந்தையில் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால், சித்தாமூர் பகுதியில் சந்தை நடத்தப்படாமல் உள்ளதால், விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, இப்பகுதியில் வார சந்தை அமைத்தால், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கி பயனடைய முடியும்.
மேலும், சந்தை வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே, வார சந்தை அவசியம் அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.