ADDED : ஜன 03, 2024 11:14 PM
ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிக்கும்போது, தடையின்மை சான்று தேவையில்லை என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, அதன் முன் தகவல் படிவத்தை மட்டும், தங்கள் மேல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த முன் நகல் படிவம் அனுப்பிய பின், பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை, 2015ம் ஆண்டு அரசாணையின்படி பின்பற்றலாம் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.