வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: இன்றும் தாக்கல் செய்ய அவகாசம்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: இன்றும் தாக்கல் செய்ய அவகாசம்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு: இன்றும் தாக்கல் செய்ய அவகாசம்
ADDED : செப் 16, 2025 06:55 AM

புதுடில்லி: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஐடிஆர் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் எதிரொலியாக, கணக்கு தாக்கல் செய்யும் காலம் செப்.15 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டதாக வரி செலுத்துவோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அபராதம் இன்றி வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை இன்றும் (செப்.16) தாக்கல் செய்யலாம் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வருமானவரித்துறை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக, இதுவரை 7 கோடி பேருக்கும் அதிகமானோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.