ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிவு; புதிய கட்டுப்பாடால் பாதிப்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிவு; புதிய கட்டுப்பாடால் பாதிப்பு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை சரிவு; புதிய கட்டுப்பாடால் பாதிப்பு
ADDED : செப் 23, 2025 06:44 AM

மதுரை; தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக, 1,324 விடுதிகள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இங்கு இலவசமாக தங்கி படிக்கின்றனர். இவ் விடுதிகளில் இந்தாண்டு, 5 கி.மீ.,க்குள் வீடுகள் உள்ள மாணவர்களை சேர்ப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
இக்கட்டுப்பாடு பெண் குழந்தைகளுக்கு கிடையாது. அதேசமயம் மாணவர்கள் என்றால் ஆதரவற்றோர், ஒரு பெற்றோர் உள்ளவர்கள், பெற்றோர் வெளியூரில் தங்கி வே லை செய்வோர், மாற்றுத்திறனாளி ஆகியோரது குழந்தைகள் என்றாலும், இக்கட்டுப்பாடு பொருந்தாது. அவர்கள் இதற்கான சான்றை வழங்கினால் போதும்.
கடந்தாண்டு வரை இந்த மாதிரியான கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டால், இந்தாண்டு பல விடுதிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ள து.
மாநில அளவில் அ னைத்து விடுதிகளிலும் சேர்த்து, 98,000 இடங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் வரை, 43,000 இடங்களே நிரம்பியுள்ளன; 55,000க்கு ம் மேலான இடங்கள் காலியாக உள்ளன.
அதேசமயம், பல ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து விடுதியில் சேர காத்திருக்கின்றனர். 5 கி.மீ., கட்டுப்பாட்டால் இந்த நிலை உருவாகியுள்ளது.
விடுதி வார்டன்கள் சிலர் கூறியதாவது:
மாணவர்களை தேர்வு செய்ய ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், எம்.எல்.ஏ., கிராம பிரதிநிதி அடங்கிய குழு ஒன்று உள்ளது.
இக்குழு, 5 கி.மீ., துார கட்டுப்பாட்டை எதிர்க்கும் என்பதால், திட்ட மிட்டே அக்குழுவை புறக்கணித்து உயரதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.