'முதல்வர் பதவியை திருப்பி அளித்தது தான் என் வரலாறு'
'முதல்வர் பதவியை திருப்பி அளித்தது தான் என் வரலாறு'
'முதல்வர் பதவியை திருப்பி அளித்தது தான் என் வரலாறு'
ADDED : ஜூன் 16, 2025 03:08 AM

ராஜபாளையம்,: ''முதல்வர் பதவியை சிறப்பாக நிர்வகித்து, அதை கொடுத்தவரிடமே திருப்பி அளித்தது தான் என் வரலாறு,'' என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மறவர் மகா சபை ஆண்டு விழாவில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
உயர் கல்வி வரை குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். கல்வித் துறைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கி வந்த நிலையில், மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கை கல்வித் துறைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார்.
விருதுநகரில் பட்டதாரி இளைஞர்கள் டீக்கடை துவங்கியதை செய்தித்தாளில் படித்து, என் ஊரில் நண்பருடன் டீக்கடை துவங்கினேன். சாதாரண தொண்டனான என்னை தமிழக முதல்வர் ஆக்கியவர் ஜெயலலிதா. அப்பதவியில் சிறப்பாக செயலாற்றி, அந்த பதவியை கொடுத்தவரிடமே, அதை திருப்பிக் கொடுத்தது தான் என் வரலாறு.
மறவர் சமுதாயம் உரிமையைப் பெற உழைத்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யாராலும் நம்மை வெல்ல முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.