பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை வருமா?
பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை வருமா?
பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை வருமா?
ADDED : ஜூன் 16, 2025 03:07 AM

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களில் மட்டும், வேலுார் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்; காஞ்சிபுரம் அருகே பிளஸ் 1 மாணவி; கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி; கன்னியாகுமரியில் டியூஷன் சென்ற மாணவி; திருச்செந்துாரில் ஒன்பதாம் வகுப்பு மாணவி என பலர் பாலியல் கொடுமைக்குள்ளாகி உள்ளனர்.
தினமும் நடக்கும் இந்த வன்கொடுமைகளால், தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
காவல் துறை நடவடிக்கைகள் சரியில்லாததும், குற்றங்கள் அதிகரிக்க காரணம். எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்திலாவது, பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை தி.மு.க., அரசு துரிதப்படுத்த வேண்டும்.
தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,