/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சொத்தை பிரித்து கொடுக்காத தந்தை ஆடு, மாடுகளை கொன்ற மகன் கைது சொத்தை பிரித்து கொடுக்காத தந்தை ஆடு, மாடுகளை கொன்ற மகன் கைது
சொத்தை பிரித்து கொடுக்காத தந்தை ஆடு, மாடுகளை கொன்ற மகன் கைது
சொத்தை பிரித்து கொடுக்காத தந்தை ஆடு, மாடுகளை கொன்ற மகன் கைது
சொத்தை பிரித்து கொடுக்காத தந்தை ஆடு, மாடுகளை கொன்ற மகன் கைது
ADDED : ஜூன் 16, 2025 03:12 AM
அஞ்செட்டி:அஞ்செட்டி அருகே சொத்தை பிரித்து கொடுக்காத கோபத்தில், தந்தை மீது இருந்த ஆத்திரத்தில், 9 ஆடுகள், 2 மாடுகளை மகன் விஷம் வைத்து கொன்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, சேசுராஜபுரம் அருகே கவுண்டர்கொட்டகை பகுதி வேளாங்கண்ணி கடை பகுதியை சேர்ந்தவர் மாது, 70, விவசாயி. ஒன்பது ஆடு, 2 மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இவருக்கு மூன்று மகன்கள், 2 மகள்கள். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மற்றும் கடைசி மகன் இறந்து விட்டனர். இரண்டாவது மகன் முருகேசன், 43, சொத்தை பிரித்து தரக்கேட்டு தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.மகள்களுக்கும் சொத்தில் பங்கு தர வேண்டும் என்று மாது கூறவே, அவர்களுக்கு தரக்கூடாது. தனக்கு மட்டுமே தர வேண்டுமென்று, நேற்று முன்தினம் தகராறு செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக மாது ஓட்டி சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், கால்நடைகளுக்கு தொட்டியில் வைத்திருந்த கழுநீரில், யூரியாவை கலந்து விட்டார். இதையறியாத மாது, மாலையில் மேய்ச்சல் முடித்து வந்து, ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டினார். அதை குடித்த சிறிது நேரத்தில் ஒன்பது ஆடுகள், இரண்டு மாடுகள் அடுத்தடுத்து பலியாகின. தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார், முருகேசனை நேற்று கைது செய்தனர்.