/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED : ஜூன் 16, 2025 03:25 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், 39ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7ல் நரசிம்ம சுவா-மிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து, கருடன், யானை மற்றும் குதிரை வாகனத்தில் நரசிம்மர் வலம் வந்தார். கடந்த, 11ல் சூரிய பிரபா, சந்திர பிரபா வாகனங்களில் நகர் வலமும், பல்லக்கு சேவை, துவாதச சாத்துமுறை சேவையும், சயன உற்சவமும், நேற்று முன்தினம் சுப்ரபாத சேவையும் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு பலவித ஹோமங்கள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபா-ராதனை ஆகியவை நடந்தன. இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.