/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விஜய விநாயகர் சத்சங்கத்தில் லட்சார்ச்சனை விழா நிறைவு விஜய விநாயகர் சத்சங்கத்தில் லட்சார்ச்சனை விழா நிறைவு
விஜய விநாயகர் சத்சங்கத்தில் லட்சார்ச்சனை விழா நிறைவு
விஜய விநாயகர் சத்சங்கத்தில் லட்சார்ச்சனை விழா நிறைவு
விஜய விநாயகர் சத்சங்கத்தில் லட்சார்ச்சனை விழா நிறைவு
ADDED : ஜூன் 16, 2025 03:25 AM
ஓசூர்: ஓசூர், முனீஸ்வர் நகர் ரிங்ரோடு பகுதியிலுள்ள விஜய விநாயகர் சத்சங்கத்தில், 11ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா கடந்த, 13ம் தேதி துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி, லட்-சுமி, சரஸ்வதி ஹோமம், 8:00 மணிக்கு விஜய விநாயகருக்கு அருகம்புல் ஏக தின லட்சார்ச்சனை, மாலையில் விஜய விநாயகர் உற்சவ மூர்த்தி திருவீதி உலா, சத்சங்க உறுப்பினர்களின் சிறப்பு பஜனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆரா-தனை, மாலை, 5:00 மணிக்கு விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், நேற்று காலை, 9:30 மணிக்கு ஓசூர் சிவன-டியார்கள் திருக்கூட்டம் மூலம், திருவாசகம் முற்றோதுதல், மாலை, 6:00 மணிக்கு, 'மேன்மை கொள் சைவ நீதி' என்ற தலைப்பில், திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியர் மோகன்ராஜ், ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை, விஜய விநாயகர் சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.