/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'ராணுவத்தின் 'சிந்துார் ஆப்பரேஷன்' வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்பு' 'ராணுவத்தின் 'சிந்துார் ஆப்பரேஷன்' வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்பு'
'ராணுவத்தின் 'சிந்துார் ஆப்பரேஷன்' வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்பு'
'ராணுவத்தின் 'சிந்துார் ஆப்பரேஷன்' வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்பு'
'ராணுவத்தின் 'சிந்துார் ஆப்பரேஷன்' வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்பு'
ADDED : ஜூன் 16, 2025 03:26 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று, இந்திய ராணுவத்தின், 'சிந்துார் ஆப்பரேஷன்' குறித்து எடுத்துரைக்க, வெளிநாடு சென்று திரும்பிய, ராஜ்ய சபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிது-ரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், நிருபர்க-ளிடம் அவர் கூறியதாவது:
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளால், சுற்றுலா பய-ணிகள், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், 'சிந்துார் ஆப்பரேஷன்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்-தது. இதை, உலக நாடுகள் அறியும் வகையில், அனைத்து கட்சி, எம்.பி.,க்கள் கொண்ட, 7 குழுக்களை உருவாக்கி, பல்வேறு நாடு-களுக்கு சென்று, அங்குள்ள பிரதமர், அதிபர், சபாநாயகர் ஆகி-யோரை சந்தித்து, பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை அந்நாடு ஐ.நா., சபையில் ஒப்புக் கொண்டுள்ளது. தீவிரவாதிகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் செயல்படுகிறது. 'சிந்துார் ஆப்பரேஷன்' மூலம் பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன என்பதை தெரிவித்தோம். இந்திய ராணு-வத்தின் தாக்குதலை,
வெளிநாட்டு தமிழர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கும், போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை. போலீஸ் ஸ்டேஷன்கள், தி.மு.க.,வினரின் கைகளுக்கு சென்றுவிட்டது. உண்மையான, தி.மு.க.,வினருக்கே
அக்கட்சியில் மரியாதை இல்லை. தி.மு.க.,
தமிழகத்தில் பயங்கரவாதத்தை உருவாக்கி வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.