நோய்களை கண்டறிய உதவும் 'மொபிலாப்' கருவி
நோய்களை கண்டறிய உதவும் 'மொபிலாப்' கருவி
நோய்களை கண்டறிய உதவும் 'மொபிலாப்' கருவி
ADDED : செப் 21, 2025 01:39 AM
நகரங்களில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டுமானால் வீட்டுக்கு டெக்னீஷியன் வருவார், சாம்பிள் எடுத்து செல்வார். அடுத்த நாள் ரிசல்ட் கிடைக்கும். இதுபோன்ற வசதிகள் நமது கிராமப்புறங்களில் இல்லை. சொல்லப்போனால், 90 சதவீத கிராமங்களில் இன்னும் மருத்துவ பரிசோதனை வசதிகள் இல்லை. எனவே, மருத்துவ வசதிக்காக நகரங்களை தேடிப் போக வேண்டிய சூழல் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட அஸ்ஸாம் - கவுகாத்தியை சேர்ந்த ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் ஆரம்பித்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனி தான் 'மொபிலாப்'
'அடுத்த தலைமுறைக்கான முன்கணிப்பு நோயறிதல் தீர்வுகளை உருவாக்குவதே' என்ற தொலைநோக்கு பார்வையை மனதில் கொண்டு, மக்களுக்கு மலிவு விலையிலும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'மொபிலாப்' ஆரம்பிக்கப்பட்டது. இது நம்பகமான மற்றும் துல்லியமான ரத்த பரிசோதனை முடிவுகளை உடனடியாக வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட், கையடக்க நோயறிதல் கருவி. இது பல அளவுருக்கள் கொண்ட, பாக்கெட் அளவிலான பாயின்ட் -ஆப் -கேர் -டெஸ்டிங் (POCT) சாதனம்.
சுகாதார நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கருவி, கிளினிக்குகள், நடமாடும் சுகாதார முகாம்கள், அவசரகால சூழ்நிலைகள், கிராமப்புற பகுதிகள் என்று பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்த ஏற்றது. இந்த கருவி 25 வைட்டல் அளவுருக்களை வழங்குகிறது.
அதாவது, ஹார்ட் ப்ரொபைல், கொலஸ்ட்ரால், LDL, ட்ரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால், கல்லீரல் ப்ரொபைல், பிலிரூபின், அல்புமின், புரோட்டீன், குளோபுலின். A/G விகிதம், AST, ALT, AST/ALT, சிறுநீரக ப்ரொபைல், கிரியாட்டினின், யூரிக் அமிலம், யூரியா, BUN, BUN/ கிரியேட்டினின், ரத்த சோகை மற்றும் நீரிழிவு நோய், ஹீமோகுளோபின், குளுக்கோஸ், HbA1c போன்றவை ஆகும்.
இந்த சாதனம் IoT- இயக்கப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக இயக்கப்படுகிறது மற்றும் பேட்டரியை ஒரேமுறை சார்ஜ் செய்தால், 150 சோதனைகளைச் செய்ய முடியும். 30 நிமிடத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இதில், தொற்று அல்லாத நோய்களை (NCDs) முன்கூட்டியே பரிசோதிக்கலாம்.
இந்த ஸ்டார்ட் அப் நோக்கமே, மலிவு விலையில் நோயறிதலைக் கிடைக்க செய்வதோடு, ஆரம்பகால பரிசோதனை, நோய் மேலாண்மை மற்றும் சிகிச்சையை விரைவுபடுத்த உடனடி முடிவுகளை உருவாக்குவதும் ஆகும்.
இந்திய அரசின், 'மேக்- இன்- இந்தியா' முயற்சியின் கீழ் மொபிலாப் இறக்குமதிக்கான மாற்றீட்டை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கம்பெனியின் அடுத்த கட்டம், ஒரே நேரத்தில் ஐந்து சோதனைகளைச் செய்ய முன்மாதிரியை ( Mobilab M1) மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவிருக்கிறது.
இது நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தை வியத்தகு முறையில் குறைக்கும். இவர்களின் சேவை இந்தியா முழுவதும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவும். இணையதளம் www.mobilab.in.
சந்தேகங்களுக்கு:
இ-மெயில்: sethuramansathappan@gmail.com
அலைபேசி: 9820451259.
இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -