/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தனியார் ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க மாநிலத்தவர் இருவர் கைது தனியார் ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க மாநிலத்தவர் இருவர் கைது
தனியார் ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க மாநிலத்தவர் இருவர் கைது
தனியார் ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க மாநிலத்தவர் இருவர் கைது
தனியார் ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க மாநிலத்தவர் இருவர் கைது
ADDED : செப் 21, 2025 01:41 AM
ஓசூர், தனியார் ஆம்னி பஸ்சில், 10 கிலோ கஞ்சாவை, கோவைக்கு கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று காலை, 9:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஹைதராபாத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூரு வழியாக, கோவை மாவட்டத்திற்கு, 'ஆரஞ்ச்' என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த களிப்படா மண்டல், 33, மதன் மண்டல், 39, ஆகியோர், 10 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிந்தது.
அவர்களிடம் விசாரித்த போது, மேற்கு வங்கத்திலிருந்து கஞ்சாவை வாங்கி, ரயில் மூலமாக பெங்களூரு கொண்டு வந்து, அங்கிருந்து கோவைக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.