ADDED : செப் 21, 2025 01:37 AM
சேலம் :சேலம் புது பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி திடலில், கலை, பண்பாடு துறை சார்பில், 2 நாள் கலை திருவிழா நேற்று தொடங்கியது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: சேலம் மண்டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 கலைக்குழுக்கள் அடங்கிய, 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு தொடங்கப்பட்ட சேலம் சங்கமம் - நம்ம
ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி நாளையும்(இன்று) நடக்கிறது. தமிழக பாரம்பரியத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க, சங்கமம் விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட அளவில், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என, 15 கலைஞர்களுக்கு விருது, பரிசுத்தொகையை வழங்கி கவுரவித்தார். மேயர் ராமச்சந்திரன், மேற்கு தொகுதி, பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள் உள்பட
பலர் பங்கேற்றனர்.