/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோகுலம் செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல் கோகுலம் செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
கோகுலம் செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
கோகுலம் செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
கோகுலம் செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
ADDED : செப் 21, 2025 01:37 AM
சேலம் :சேலத்தில் கோகுலம் செவிலியர் கல்லுாரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லுாரி
யின் பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி நிர்வாக அறங்காவலர் அர்த்தனாரி தலைமை வகித்தார். மருத்துவம் சார்ந்த கல்லுாரியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளரான, சமூகநல மருத்துவர் பிரகாஷ் வரவேற்றார்.
செவிலியர் கல்லுாரி ஆண்டறிக்கையை, முதல்வர் தமிழரசி, மருத்துவம் சார்ந்த கல்லுாரி ஆண்டறிக்கையை, முதல்வர் மற்றும் கோகுலம் மருத்துவமனை குடலியல் மருத்துவர் ராஜேஷ் வாசித்தனர்.
சேலம் ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன், கே.எம்.சி.ஹெச்., செவிலியர் கல்லுாரி முதல்வர் மாதவி ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர். இளங்கலை செவிலியர் பிரிவில், 56 மாணவ, மாணவியர், முதுகலை பிரிவில், 4 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில், 29 மாணவ, மாணவியர் அடுத்தடுத்து பட்டம் பெற்றனர்.
தொடர்ந்து, இளங்கலை யில் சிறந்த மாணவி சுபாஷினி, முதுகலையில் தர்ஷனி
பிரியா, மருத்துவம் சார்ந்த படிப்பில் கவிதாபிரியா ஆகியோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து பிரிவுகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு வெள்ளி பதக்கம், 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த பேராசிரியர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டன. மருத்துவமனை இயக்குனர் செல்லம்மாள் உள்பட இதர இயக்குனர்கள், செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ், பெற்றோர் உள்பட பலர்
பங்கேற்றனர்.