/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புரட்டாசி முதல் சனி பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் புரட்டாசி முதல் சனி பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனி பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனி பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனி பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : செப் 21, 2025 01:38 AM
சேலம் :புரட்டாசி முதல் சனியை ஒட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், சிங்கமுக ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் செய்து தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் மூலவர், உற்சவர்களுக்கு முத்தங்கி அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் மூலவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும், தங்க கவசம் சார்த்தப்பட்டது.
அம்மாபேட்டை நாமமலை உச்சியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷாத்ரி வாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. அம்மாபேட்டை பாபுநகரில் வளர்பிறை நண்பர் குழு சார்பில், 27ம் ஆண்டாக, அலர்மேல் மங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்து, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில், 2,000 சுமங்கலி பெண்களுக்கு, திருமாங்கல்ய கயிறு, அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர், வெற்றிலை காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பட்டைக்கோவில் வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தாரமங்கலம், அமரகுந்தி கரிய பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. அதில் காணியாச்சிகாரர்கள், ஸ்ரீதேவி, பூதேவி, கரியபெருமாள் உற்சவமூர்த்தியை, சின்னாகவுண்டம்பட்டியில் இருந்து, 3 கி.மீ.,ல் உள்ள கோவிலுக்கு, தோளில் சுமந்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் சுவாமிக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை நடந்தது. சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவ பெருமாள், மங்கமலை பெருமாள், ஒருக்காமலை வரதராஜர் உள்ளிட்ட கோவில்களில் பூஜைகள் நடந்தன. காலையிலிருந்தே பக்தர்கள் குடும்பத்துடன் மலைக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். விவசாயிகள் விளை
பொருள்களை வைத்து வேண்டினர்.
ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவருக்கு அபி ேஷக பூஜை நடந்தது. அப்போது புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் காட்சியளித்தார். ஆறகளூர் கரிவரதராஜர், வீரகனுார் கஜவரதராஜர், நரசிங்கபுரம் ரங்கநாதர், ஆத்துார், கோட்டை குபேர ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து, ஏராளமான பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.