ADDED : ஜன 12, 2024 11:36 PM
தமிழக பள்ளிக்கல்வி துறையில், வட்டார கல்விஅலுவலர் என்ற பி.இ.ஓ., பதவியில், 33 இடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், இந்த ஆண்டு ஜூலையில் தேர்வு நடந்தது. தேர்வில், 42,716 பேர் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள், நவ., 9ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 14ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, பணிக்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டது.