Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'யார் அந்த சார்?' 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

'யார் அந்த சார்?' 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

'யார் அந்த சார்?' 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

'யார் அந்த சார்?' 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை துவக்கிய அ.தி.மு.க.,

Latest Tamil News
சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், 'யார் அந்த சார்?' என்ற, 'ஸ்டிக்கர்' பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், 'யார் அந்த சார்?' என்பதை கேட்டு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு நிர்வாகிகள், சென்னையில் உள்ள மால்களில், 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., இளைஞர் பாசறை சார்பில், இருசக்கர வாகனங்கள், கார்களில், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவகத்தில், வாகனங்களில், 'யார் அந்த சார்?' என்ற ஸ்டிக்கர்களை நேற்று மாலை ஒட்டினர்.

தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் தங்கள் வாகனங்களில், இந்த ஸ்டிக்கரை ஒட்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராடுவர் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

போஸ்டர் யுத்தம்


இந்தாண்டு பொங்கலுக்கு பரிசு தொகை வழங்கப்படாத நிலையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு, 2,500 ரூபாய்; தி.மு.க., ஆட்சியில் 0' என, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க.,வும் தமிழகம் முழுதும் போஸ்டர் ஒட்டி வருகிறது.

தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் வெளியேறிய கவர்னர் ரவியை கண்டித்து, 'அத்துமீறும் கவர்னர்; அவரை காப்பாற்றும் அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ளக் கூட்டணி; கெட் அவுட் ரவி' என, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us