மதுரை எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் அனுமதி
மதுரை எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் அனுமதி
மதுரை எய்ம்ஸ் மாஸ்டர் பிளான் அனுமதி
ADDED : ஜன 01, 2024 06:14 AM
திருப்பரங்குன்றம் : மதுரையை சேர்ந்த வல்லரசு என்பவர் கடந்தாண்டு நவம்பரில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடுக்கு முன்பு செய்ய வேண்டிய அனைத்து ஆவண பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. மத்திய அரசு, ஜப்பான் அரசுடன் ஒப்பந்த கையெழுத்து பணிகள் முடிவடைந்துள்ளன.
இரு நாட்டு ஒப்பந்தப்படி, எய்ம்ஸ் கட்டுமான பணிகள், 2026 அக்டோபருக்குள் முடிக்கப்பட வேண்டும். இம்மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தம், 1977.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்காக திட்ட மேலாண்மை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான மாஸ்டர் பிளானும் இறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த, 2021 - -2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் தற்காலிகமான இடங்களில் துவங்கப்பட்டுள்ளன என, பதில் அளிக்கப்பட்டு உள்ளது.