அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

வேடிக்கை
பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று படுக்க போனால் விழுகிறது உங்கள் சாம்பல் ஆக தான் இருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல் தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது நான் பேசுகிறது வேடிக்கையாக தான் இருக்கும்.
சுவாசிக்க காற்று
நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.