'அந்த நாலு பேரும் முதலில் சேரட்டும்'
'அந்த நாலு பேரும் முதலில் சேரட்டும்'
'அந்த நாலு பேரும் முதலில் சேரட்டும்'
ADDED : செப் 10, 2025 06:26 AM

சென்னை: “அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்ற நான்கு பேரும் முதலில் ஒன்று சேரட்டும்; பின் கட்சியில் இணைவது பற்றி பேசலாம்,” என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். கிட்னி திருட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், திருச்சி சமயபுரத்தில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பின், வளர்மதி அளித்த பேட்டி:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்களே, அ.திமு.க.,வில் உள்ளனர். அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பொதுச்செயலர் பழனிசாமி பின் நிற்கின்றனர். ஒரே ஒருவர் எதிர்த்து செல்வதால், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவும் இல்லை; பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.,வை தொட்டவர்கள்தான் காணாமல் போவர். கட்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது; தற்போது கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக வைக்கப்படும் பிரசாரம் எல்லாம் தவறான பிரசாரம்.
பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். முதலில் பிரிந்து சென்ற நான்கு பேரும் ஒன்றிணையட்டும். அதன்பின், மற்றதை பேசலாம். அ.தி.மு.க., நிர்வாகிகளான நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அ.தி.மு.க., வலுவான அரசியல் கட்சி; அதை யாராலும் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.