'டார்ச் லைட்' சின்னம் கேட்டு கமல் கட்சி மனு
'டார்ச் லைட்' சின்னம் கேட்டு கமல் கட்சி மனு
'டார்ச் லைட்' சின்னம் கேட்டு கமல் கட்சி மனு
ADDED : ஜன 31, 2024 02:10 AM
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சிவெளியிட்ட அறிக்கை:
ம.நீ.ம., தலைவர் கமல், வெளிநாடு செல்ல உள்ளார். எனவே, லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து, துணை தலைவர்கள் மற்றும் பொதுச்செயலருடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், லோக்சபா தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தவும், பிற குழுக்களை அமைக்கவும், தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை, ம.நீ.ம., தலைவர் கமல் அமைத்துள்ளார்.
ம.நீ.ம., துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொது செயலர் அருணாச்சலம் ஆகியோர், இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவர்.
மேலும், லோக்சபா தேர்தலில், கட்சிகளின் சின்னம் குறித்து விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, டிச., 17ம் தேதி அன்றே, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கி தருமாறு, ம.நீ.ம., சார்பில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.