அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு

தவறு செய்து விட்டேன்
இது தொடர்பாக இன்று(மே 29) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:
மேடை நாகரிகம்
ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது. மேடை நாகரிகத்தை கடைபிடிக்காது யார்? மேடையில் காலை ஆட்டிக்கொண்டிருந்தது சரியா?
பக்குவம் இல்லை
தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடத் தொடங்கியது அன்புமணி தான். அழகான கட்சியை உடைத்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். அழகான, ஆளுயர கண்ணாடி ஆன கட்சியை ஒரு நொடியில் அன்புமணி உடைத்து விட்டார். முகுந்தன் நியமன விவகாரத்தில் தனது தாயை பாட்டிலில் வீசி அன்புமணி தாக்கினார்.
பொய் பேசுகிறார்
கட்சியினரிடம் பனையூர் அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்று அன்புமணி கூறியது சரியா? 4 சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? யார் உழைத்த கட்சி பா.ம.க., யார் யாருக்கு உத்தரவிடுவது. பொய்யை அன்புமணி மூச்சு விடாமல் பேசுவார். கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்து அன்புமணி நிர்வாகிகளை வராமல் தடுத்துவிட்டார்.