நீர்மின் உற்பத்தி மழையால் 1,000 மெகாவாட் அதிகரிப்பு
நீர்மின் உற்பத்தி மழையால் 1,000 மெகாவாட் அதிகரிப்பு
நீர்மின் உற்பத்தி மழையால் 1,000 மெகாவாட் அதிகரிப்பு
ADDED : மே 31, 2025 06:17 AM

சென்னை : நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலியில், மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. அணைகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
தினமும் சராசரியாக, 750 - 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். தண்ணீர் வரத்து இல்லாததால், அணைகளில் இருந்த மிக குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, இம்மாதம் துவக்கத்தில், 100 மெகாவாட்டிற்கு குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது, தென்மேற்கு பருவமழை நன்கு பெய்வதால், நீலகிரி, கோவையில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. இதனால், நீர்மின் உற்பத்தி, 1,000 மெகா வாட்டாக அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் உள்ள 831 மெகாவாட் திறன் உடைய 12 நீர்மின் நிலையங்களில், 24 மணி நேரமும், 550 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.